×

ஆரணி அவுஸ் பகுதியில் தூய்மை பணி

ஊட்டி: ஆரணி அவுஸ் பகுதியில் குவிந்திருந்த குப்பைகளை ஊட்டி நகராட்சி சுகாதாரத்தறை ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். ஊட்டி நகராட்சிக்குட்பட்ட ஆரணி அவுஸ் பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில், தினமும் சென்று நகராட்சி ஊழியர்கள் குப்பைகளை அகற்றாமல் இருந்துள்ளனர். இதனால், அப்பகுதியில் குப்பைகள் மலைபோல் குவிந்து காணப்பட்டது.

இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டது. மேலும், கால்நடைகள் மற்றும் காட்டு பன்றிகள் போன்றவைகளின் தொல்லைகளும் அதிகரித்தது. இதனால், ஆரணி அவுஸ் பகுதியில் உள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இதனை தொடர்ந்து, நேற்று ஊட்டி நகராட்சி தூய்மை பணியாளர்கள் அப்பகுதிக்கு சென்று, அப்பகுதியில் இருந்த குப்பைகள் மற்றும் கழிவுகளை அகற்றி அப்பகுதியை தூய்மைப்படுத்தினர். தூய்மை பணி மேற்கொண்ட நகராட்சி நிர்வாகம் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

Tags : Arani Aus ,
× RELATED வேளாண் பல்கலையில் கோடை கால பயிற்சி முகாம்