பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் ரூ.1.20 லட்சத்தில் நலத்திட்ட உதவி: கலெக்டர் விஜயா ராணி வழங்கினார்

சென்னை: சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் விஜயா ராணி தலைமையில் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து  90 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

ஏற்கனவே பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளி, முதியோர், விதவை உதவித் தொகையாக 10 பயனாளிக்கு ₹1.20 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிக்கான  காசோலையை கலெக்டர் விஜயா ராணி வழங்கினார்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகோபாலன்,  மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) ஆர்.ரமா,  மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) செ.அபிஷேகம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தே.ஸ்ரீநாத்,   மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் எஸ்.சூரியகலா கலந்துகொண்டனர்.

Related Stories: