ரூ.35 லட்சம் வாடகை பாக்கி: 7 கடைகளுக்கு சீல் வைப்பு

அண்ணாநகர்: கோயம்பேடு ஆம்னி பஸ் நிலைய வளாகத்தில் சிஎம்டிஏவுக்கு சொந்தமான கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இதில், சிலர் ஆம்னி பஸ் டிக்கட் புக்கிங் அலுவலகம் நடத்தி வருகின்றனர். இதில், 7 கடைகளை வாடகைக்கு எடுத்த சிலர், கடந்த சில வருடங்களாக வாடகை தராமல் இருந்து வந்தனர். இதையடுத்து, சிஎம்டிஏ அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடைகளுக்கு, வாடகை செலுத்த வேண்டுமென, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நோட்டீஸ் அனுப்பினர். ஆனால், கடை வாடகைதாரர்கள் வாடகை பணத்தை செலுத்தாமல் அலட்சியமாக இருந்தனர். அவர்களுக்கு  நோட்டீஸ் அனுப்பினர்.

பின்னர், கடைசியாக கடந்த டிசம்பர்  மாதம் சிஎம்டிஏ அதிகாரிகள் நேரடியாக சென்று எச்சரித்து சென்றனர். ஆனால், இதுவரை வாடகை செலுத்தாததால் நேற்று மதியம் அங்கு விரைந்து சென்ற சிஎம்டிஏ அதிகாரிகள் ₹35 லட்சம் வாடகை பாக்கி வைத்திருந்த 7 கடைகளுக்கு அதிரடியாக சீல் வைத்தனர். மேலும், வாடகை பாக்கி முழுமையாக செலுத்திய பிறகு கடைகளுக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: