மீஞ்சூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் குடிநீர், கழிப்பிட வசதி இல்லை என மாணவர்கள் புகார்: எம்எல்ஏ திடீர் ஆய்வு

பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு, 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் தூய்மையான குடிநீர், போதிய கழிப்பிட வசதி, விளையாட்டுப் பொருட்கள் ஆகியவை இல்லாமல் மாணவர்கள் அவதிப்பட்டு வருவதாக பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துறை சந்திரசேகருக்கு புகார்கள் தொடர்ந்து வந்தது. இந்நிலையில்,  எம்எல்ஏ துரை சந்திரசேகர் திடீரென ஆய்வு நடத்தினார்.

இதில், பள்ளிக்கூடத்தில் கழிப்பிடங்கள் தூய்மைப்படுத்தபடாமலும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், விளையாட்டுப் பொருட்கள் ஆகியவை  இல்லை என்பதையும், மாணவர்கள் அவரிடம் புகாராக தெரிவித்தனர். அப்போது, மாணவர்களுக்காக வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்தும் தலைமை ஆசிரியர் உள்ளிட்டோரிடம் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் கேட்டறிந்தார். இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எம்எல்ஏ தெரிவித்தார்.  இந்த ஆய்வின்போது மீஞ்சூர் பேரூராட்சி செயல் அலுவலர் வெற்றி அரசு உடன் இருந்தார்.

Related Stories: