×

தண்டலம் ஊராட்சியில் குற்ற சம்பவங்களை தடுக்க சிசிடிவி கேமரா: கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்

ஸ்ரீபெரும்புதூர், ஜன.4: தண்டலம் ஊராட்சியில் குற்றம் சம்பவங்களை தடுக்க சிசிடிவி கேமரா பொருத்துவது குறித்து கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் தண்டலம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் சிறப்பு கிராம சபை கூட்டம், ஊராட்சி மன்ற அலுவலக வளா  கத்தில் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் சசிகுமார் தலைமை வகித்தார். துணை தலைவர் வேலாயுதம் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் ரமேஷ் வரவேற்றார். ஸ்ரீபெரும்புதூர் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜானகி கலந்து கொண்டு, பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

கூட்டத்தில், குற்ற சம்பவங்களை தடுக்க ஊராட்சி முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது, அனைத்து தெருக்களில் சாலை, கழிவுநீர் கால்வாய் அமைப்பது, குடிநீர், மின்விளக்கு பராமரித்தல் மற்றும் ஊராட்சியில் புதிய சமுதாய நலக்கூடம் கட்டிடம் கட்டுவது உள்பட பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Tandalam panchayat ,
× RELATED தண்டலம் ஊராட்சியில் குற்ற சம்பவங்களை...