×

இன்று 3வது தடுப்பூசி முகாமில் 20 முதல் 25 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடு மற்றும் 108 ஆம்புலன்ஸ் சேவையின் ஆண்டு விழா நேற்று நடந்தது. விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு அங்கு அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து, நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பயனாளிகளுக்கு புதிய காப்பீடு திட்ட அட்டையையும், சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு சான்றிதழும் வழங்கினார். பின்னர், அவர் அளித்த பேட்டி: முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஆண்டு வருமானம் 72 ஆயிரத்திற்கும் குறைவாக உள்ள 1 கோடியே 58 லட்சம் குடும்பங்கள் மருத்துவ காப்பீடு பெற சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த காப்பீட்டு திட்டத்தில் கருப்பு பூஞ்சை நோயும் சேர்க்கப்பட்டு 1,850 பயனாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு தற்போது 29 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வந்திருக்கிறது. அவை அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பப்பட்டுள்ளது. தமிழகத்தில் 3வது மெகா தடுப்பூசி முகாமில் 15 லட்சம் தடுப்பூசிகள் போடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், இலக்கை விட அதிகமாக 20 லட்சத்தில் இருந்து 25 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்படும். இதன் மூலம் 60 சதவீதத்தினர் முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர் என்ற நிலை ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்….

The post இன்று 3வது தடுப்பூசி முகாமில் 20 முதல் 25 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Minister ,M. Subramanian ,Chennai ,Thenampet ,TMS ,Chief Minister ,
× RELATED அமெரிக்கா, ஆப்பிரிக்காவுக்கு...