×

புதுவையில் புதிதாக 26 பேருக்கு கொரோனா


புதுச்சேரி, ஜன. 4: புதுச்சேரியில் நேற்று புதிதாக 26 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் 21 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் உதயகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  புதுச்சேரி மாநிலத்தில் 865 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி - 23, காரைக்கால் - 3 என மொத்தம் 26 (3.01% சதவீதம்) பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மாகே, ஏனாமில் புதிதாக யாரும் தொற்றால் பாதிக்கப்படவில்லை. மேலும், கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக நேற்று உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,881 ஆகவும், இறப்பு விகிதம் 1.45 சதவீதமாகவும் உள்ளது.
 புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 1,29,553 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது ஜிப்மரில் 13 பேரும், அரசு மார்பு நோய் மருத்துவமனையில் 13 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் 115 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மாநிலம் முழுவதும் மொத்தம் 155 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 21 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,27,517 (98.43 சதவீதம்) ஆக உள்ளது.
 இதுவரை 20,52,693 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 17,41,612 பரிசோதனைகள் நெகடிவ் என்று முடிவு வந்துள்ளது.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Corona ,Puduvayal ,
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...