கடலூரில் வளர்ச்சி திட்ட பணிகள் அமைச்சர்கள் இன்று ஆய்வு

கடலூர், ஜன. 4:      கடலூரில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று ஆய்வு செய்ய உள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர் மாநகராட்சி மற்றும் நகராட்சிகள், பேரூராட்சிகளில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்ட  பணிகள், கூட்டு குடிநீர் திட்டம், வார்டு மறுசீரமைப்பு  உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு செய்ய தமிழக நகராட்சி நிர்வாகம்  மற்றும் குடிநீர் வழங்கல்  துறை அமைச்சர் கே.என்.நேரு, வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று 12மணிக்கு கடலூர் மாவட்டத்துக்கு வருகின்றனர். அவர்களுக்கு கடலூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் வடலூரில் பிரமாண்டமாக மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வரவேற்பு அளிக்கின்றனர்.  மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரிய துறை அலுவலர்களுக்கான வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் மதியம் 2 மணிக்கு நடைபெறுகிறது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எம்எல்ஏக்கள், கலெக்டர் பாலசுப்ரமணியம் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

Related Stories: