×

சென்னையில் 35 இடங்களில் நடந்த ஐடி ரெய்டில் ரூ300 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு

*  ரூ9 கோடி ரொக்கப்பணம் பறிமுதல் *  அதிகாரிகள் அதிரடிசென்னை:  சென்னை, சவுகார்பேட்டை ஸ்டார்ட்ன் முத்தையா  தெருவில் உள்ள ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபர் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது வீடு மற்றும்  தொழிற்சாலைகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.  சவுகார்பேட்டையில் உள்ள தொழிலதிபரின் வீடு, குடோன், வேப்பேரியில் உள்ள  அலுவலகம், அண்ணாநகரில் உள்ள அலுவலகம், தொழிற்சாலை என 15 இடங்களில் ஒரே நேரத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இதில், கணக்கு வழக்குகள், கணினிகள், லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டப்பட்டது. தொடர்ந்து அதிகாரிகள் கண்காணித்ததில், வடசென்னையில் உள்ள 2 நிதி நிறுவனங்கள் அதிக அளவில் வட்டி வாங்கி வந்ததும், அதை மறைத்து வரி ஏய்ப்பில் ஈடுபட்டு வந்ததையும் கண்டறிந்தனர். அதன்படி, சென்னையில் உள்ள இரண்டு தனியார் நிதி நிறுவனங்களில் கடந்த 23ம் தேதி மற்றும் 2வது நாளாக நேற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.  இந்த நிதி நிறுவனங்கள் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுவருவதை வருமானவரித்துறை அதிகாரிகள் கண்டறிந்தனர். மேலும், அதிகாரிகளின் தொடர் விசாரணையில், அதிகப்படியான வட்டிக்கு பணம் கொடுத்து வட்டி வசூலித்து வந்ததும், இதற்கான வரியை முறையாக கட்டாமல் வரி ஏய்ப்பு செய்ததையும் அதிகாரிகள் கண்டறிந்தனர். மேலும், கடன் பெற்றவர்களிடம் இருந்து வாங்கும் அதிக வட்டி தொகையை மறைமுகமாக வேறு கணக்கின் மூலம் மாற்றி வசூலித்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த 2 நிதி நிறுவனங்களைத் தொடர்ந்து, சென்னையில் கீழ்ப்பாக்கம், சவுகார்பேட்டை உட்பட 35 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், வங்கி பணப்பறிமாற்ற புத்தகங்கள், லேப்டாப் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். அதிகாரிகளின் தீவிர சோதனையில் ரூ300 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டறியப்பட்டது. மேலும், ரொக்கமாக ₹9 கோடி இருந்ததை வருமானவரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்தனர். இந்த பறிமுதலைத் தொடர்ந்து, நிதி நிறுவன நிர்வாகிகளிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்….

The post சென்னையில் 35 இடங்களில் நடந்த ஐடி ரெய்டில் ரூ300 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,ActionChennai ,Chennai, Sawugarpet ,Startn Muthaya Street, Rajasthan ,ID ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...