×

கழுகுமலை, சாத்தான்குளத்தில் அனுமன் ஜெயந்தி கோலாகலம்

கழுகுமலை, ஜன. 4: கழுகுமலை, சாத்தான்குளத்தில் அனுமன் ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கழுகுமலையில் கிரிவலப்பாதையில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்பட்டது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கணபதி பூஜை, கும்ப கலச பூஜை தீபாராதனை நடந்தது. மாலை 6 மணிக்கு ஆஞ்சநேயருக்கு 18 வகையான சிறப்பு அபிஷேகத்தைத் தொடர்ந்து, வெற்றிலை மாலை, துளசி மாலை, வடை மாலை அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் கழுகுமலை மற்றும் சுற்று வட்டார மக்கள் பங்கேற்று தரிசித்தனர். சாத்தான்குளம்: சாத்தான்குளம் பெருமாள் சுவாமி கோயிலில் அனுமன் ஜெயந்தியையொட்டி பெருமாள் சுவாமி, ஆஞ்சநேயருக்கு சிறப்பு திருமஞ்சன அலங்கார தீபாராதனை நடந்தது. கோயில் வளாகத்தில் உள்ள ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதில் திரளானோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை பக்தர்கள் செய்திருந்தனர்.

Tags : Hanuman Jayanthi ,Kalugumalai, Sathankulam ,
× RELATED வத்தலக்குண்டுவில் வால்கோட்டை ஆஞ்சநேயர் சப்பரத்தில் பவனி