×

கழுகுமலையில் அரசு பள்ளி அருகே சாய்ந்த நிலையில் காணப்படும் மரத்தால் விபத்து அபாயம்

கழுகுமலை, ஜன. 4: கழுகுமலையில் அரசு பள்ளி அருகே சாய்ந்த நிலையில் காணப்படும் மரத்தால் விபத்து அபாயம் நிலவுகிறது.  கழுகுமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 1,000 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதன் அருகே கோவில்பட்டி கோட்டம், நெடுஞ்சாலைத்துறைக்கு உட்பட்ட கோவில்பட்டி - சங்கரன்கோவில் மெயின் ரோட்டில் மிகவும் சாய்ந்தவாறு ஆபத்தான நிலையில் மரம் உள்ளது.  இது பிரதான சாலை என்பதால் தூத்துக்குடியில் இருந்து அதிக அளவில் பாரம் ஏற்றிவரும் கனரக வாகனங்கள், சிமென்ட் லோடு லாரிகள், தீப்பெட்டி ஆலைகளில் இருந்து பண்டல்கள் ஏற்றி வரும் வாகனங்களும் ஆபத்தான இந்த மரத்தை உரசியபடியே செல்வதால் விபத்து அபாயம் நிலவுகிறது. பள்ளி நேரத்தில் மரங்கள் திடீரென சாய்ந்தால் அறுந்துவிழும் மின்கம்பிகள்  மூலம் மாணவர்களுக்கும் அசம்பாவிதம் ஏற்படும் சூழலும் உள்ளது. எனவே, இதுவிஷயத்தில் நெடுஞ்சாலைத்துறை தனிக்கவனம் செலுத்தி ஆபத்தான நிலையில் உள்ள இந்த மரத்தை விரைவில் மாற்றி அகற்றுமா? என்பதே பெற்றோர் உள்ளிட்ட அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

Tags : Kalugumalai ,
× RELATED இலவச பட்டா வழங்கிய இடத்தில் குடியேறி பொதுமக்கள் போராட்டம்