×

மக்கள் தீர்மானித்து விட்டனர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் 100 சதவீதம் திமுக வெற்றி பெறும்

நெல்லை, ஜன. 4:  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் திமுக 100 சதவீதம் வெற்றி பெற வேண்டும் என்பதை மக்கள் தீர்மானித்து விட்டனர் என நெல்லை மத்திய மாவட்ட திமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசினார். நெல்லை மத்திய மாவட்ட திமுக செயல்வீர்கள் கூட்டம் பாளை பிபிஎல் மண்டபத்தில் நடந்தது. மாவட்ட அவைத் தலைவர் சுப.சீதாராமன் தலைமை வகித்தார். மாநகர செயலாளர் ஏஎல்எஸ் லட்சுமணன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மத்திய மாவட்ட திமுக செயலாளர் அப்துல்வகாப் எம்எல்ஏ பேசியதாவது: தென் மாவட்டங்கள், திமுகவின் கோட்டையாகும். நாம் களத்தில் இருக்கிறோம். அதிமுக களத்தில் இல்லை. கட்சிக்காக உழைத்தவர்களை மாவட்ட திமுக வேட்பாளர்களாக பரிந்துரை செய்யும். யார் வேட்பாளர் என்பதை தலைவர் முடிவு செய்வார்.

இந்த இயக்கத்திற்காக தலைவர் அறிவிக்கும் வேட்பாளர்கள் யாராக இருந்தாலும் வெற்றிக்காக அனைவரும் ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும். நம்மிடம் மொத்தம் 490 பூத்கள் உள்ளன. ஒவ்வொரு பூத்திற்கும் 10 பேர் கொண்ட பூத் கமிட்டி அமைத்து இந்த வாரத்திற்குள் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சரும், திமுக தேர்தல் பிரிவு இணை தலைவருமான ராஜகண்ணப்பன் பேசியதாவது: ஊரக உள்ளாட்சி தேர்தலில் 98 சதவீதம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றோம். அதேபோன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும். திராவிட இயக்கத்திற்காக உழைத்த பெரியார், அண்ணா, கலைஞர் இன்று நம்மோடு இல்லை. கலைஞர் சிறந்த தலைவர். சிறந்த அரசியல்வாதி. அது போன்று திராவிட இயக்கத்தின் ஒட்டு மொத்த தலைவராக தற்போது மு.க.ஸ்டாலின் திகழ்கிறார். தொலை நோக்கு பார்வையோடு 10 ஆண்டுகளுக்கான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். தமிழகத்தில் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணத்தை தமிழக முதல்வர் அறிவித்தார்.

அனைத்துப் பெண்களும் இலவச பயண திட்டத்தால் பொருளாதார முன்னேற்றம் அடைந்துள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கு தான் வெற்றி என்பதை மக்கள் முடிவு செய்து விட்டனர். உள்ளாட்சி தேர்தலில் திமுக 100 சதவீதம் வெற்றி பெறும். அதற்காக அனைவரும் ஓயாது உழைக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார். கூட்டத்தில் இரவு பகல் பாராது பணியாற்றி  அகில இந்திய அளவில் சிறந்த முதல்வர் என்று பாராட்டப்பட்ட தமிழக முதல்வர்  முக. ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிப்பது, நெல்லை மாநகராட்சியில் 55  வார்டுகள், நாரணம்மாள்புரம் பேரூராட்சியில் 15 வார்டுகள், சங்கர்நகர்  பேரூராட்சி 12 வார்டுகளில் சரித்திரம் காணாத வெற்றி பெற தமிழக அரசின்  சாதனைகளை கூறி தேர்தல் பணியாற்றுவது, ஒவ்வொரு பூத்துக்கும் 10 பேர் கொண்ட  பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முன்னாள்  அமைச்சர் டிபிஎம் மைதீன்கான், தலைமை செயற்குழு உறுப்பினர்  பேச்சிபாண்டியன், மாநில நெசவாளர் அணி செயலாளர் பெருமாள், பகுதி செயலாளர்கள்  தச்சை சுப்பிரமணியன், கோபி என்ற நமச்சிவாயம், தொமுச தர்மன் உள்ளிட்டோர்  பேசினர்.

கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் தாழை கே.ஆர். ராஜூ, பகுதி செயலாளர்கள் தச்சை டாக்டர் சங்கர், பாளை அண்டன் செல்லத்துரை, பூக்கடை  அண்ணாத்துரை, மேலப்பாளையம் துபை சாகுல், அப்துல் கையூம், நெல்லை டவுன்  ரவீந்தர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வில்சன் மணித்துரை, துணை அமைப்பாளர்  பி.எம். சரவணன், விவசாய அணி அமைப்பாளர் பொன்னையா பாண்டியன், பேரங்காடி  சேர்மன் பல்லிக்கோட்டை செல்லத்துரை, முன்னாள் எம்.பிக்கள்  விஜிலாசத்யானந்த், வசந்தி முருகேசன், வக்கீல் அணி அமைப்பாளர் தினேஷ், மாநகர இளைஞரணி அமைப்பாளர் கருப்பசாமி கோட்டையப்பன், மாநகர  இளைஞரணி முன்னாள் அமைப்பாளர் எஸ்.வி. சுரேஷ், மாவட்ட பொருளாளர்  அருண்குமார், ஒன்றிய செயலாளர்கள் பாளை. வடக்கு வேலன்குளம் முருகன், மானூர்  நடராஜன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் பலராமன்,  நெல்லை தொகுதி ஒருங்கிணைப்பாளர் காசிமணி, மாவட்ட துணை செயலாளர்கள் ஆ.க.மணி,  கிரிஜாகுமார், நெல்லை மாநகர பொருளாளர் வண்ணை சேகர், மகளிரணி அமைப்பாளர்  மகேஸ்வரி, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை செயலாளர் மேகை செல்வம்,  டாஸ்மாக் தொமுச அரசன்ராஜ், மேலப்பாளையம் பகுதி துணைச் செயலாளர் ஆமீனா  சாதிக், வெ.இ. சன்ஸ், தொமுச முகம்மது சைபுதீன், முன்னாள் கவுன்சிலர்கள்  பாலன் என்ற ராஜா, பிரான்சிஸ், ரேவதி அசோக், ராஜகுமாரி, ராஜேஸ்வரி, கந்தன்,  கிட்டு என்ற ராமகிருஷ்ணன், விவசாய தொழிலாளர் அணி சண்முகசுந்தரம், மாணவரணி  அமைப்பாளர் ரம்ஜான்அலி, பேரூர் செயலாளர்கள் செல்வபாபு, துரை சுடலைமுத்து,  எல்ஐசி பேச்சிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,
× RELATED திமுகவின் சாதனைகளை கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்