தாமிரபரணி ஆற்றில் குதித்த இளம் பெண் மாயம் 2வது நாளாக இன்றும் தேட முடிவு

நெல்லை, ஜன. 4:  நெல்லை கொக்கிரகுளத்தை சேர்ந்த சரவணன் பேச்சி மனைவி பாக்கியலட்சுமி (36). இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர். இதற்காக அவர் தனியார் மருத்துவமனையில் அவ்வப்போது சிகிச்சைக்கு சென்று வந்தார். இவர் வீட்டிலிருந்து சில நேரங்களில் மாயமாகி விடுவார். இதனையடுத்து அவரது குடும்பத்தினர் அவரை தேடி கண்டுப்பிடித்து மீண்டும் வீட்டிற்கு அழைத்து வருவர். இந்நிலையில் நேற்று அதிகாலையில் வீட்டில் குடும்பத்துடன் தூங்கிக் ெகாண்டிருந்த பாக்கியலட்சுமி யாருக்கும் தெரியாமல் காலை 5.30 மணிக்கு கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றுக்கு வந்தார். பின்னர் கரையில் நின்று கொண்டிருந்த அவர் திடீரென ஆற்றில் குதித்தார். அவர் குதித்த பகுதி ஆழமானது என்பதால் நீரில் மூழ்கினார். அங்கு குளித்துக்கொண்டிருந்தவர்கள் உடனே பாளை போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் வீரராஜ் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து நீரில் மூழ்கிய பாக்கியலட்சுமியை நேற்று மாலை வரை தேடியும், கிடைக்கவில்லை. இன்று 2வது நாளாக அவரை தீயணைப்பு  வீரர்கள் தேட உள்ளனர்.

Related Stories: