அமைச்சர் கே.என்.நேரு பேட்டி சிறப்பு சுகாதார விழிப்புணர்வு முகாமில் 904 கால்நடைகளுக்கு சிகிச்சை

திருச்சி, ஜன.4: திருச்சி அருகே பா.காட்டூரில் நடந்த சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமில் 904 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. திருச்சி கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் திருவெறும்பூர் ஒன்றியம் பா.காட்டூர் கால்நடை மருந்தகத்திற்குட்பட்ட சோழமாதேவி கிராம ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. திருச்சி கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர் எஸ்தர் ஷீலா தலைமை வகித்தார். திருச்சி உதவி இயக்குநர் டாக்டர் மருதைராஜு, திருச்சி, கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநர் டாக்டர் சுகுமார் மற்றும் திருவெறும்பூர், கால்நடை மருத்துவர் சந்துரு ஆகியோர் கலந்துகொண்டனர்.

சோழமாதேவி ஊராட்சி தலைவர் முருகானந்தம் முகாமினை தொடங்கி வைத்தார்.

முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை, குடற்புழு நீக்கம், ஆண்மை நீக்கம், சினை பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல் ஆகிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமில் 904 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் 200 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டது. 50 பயனாளிகளுக்கு தாது உப்பு கலவை வழங்கப்பட்டது. மேலும் முகாமில் கன்று பேரணி நடத்தி சிறந்த கிடாரிக்கன்று தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் மற்றும் கால்நடை வளர்ப்பில் சிறந்த பராமரிப்பு மேலாண்மைக்கான விருது விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கால்நடை உதவி மருத்துவர் சேனாதிராஜா செய்திருந்தார். கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.

Related Stories: