×

ஆண்டிமடம் பகுதியில் 573 மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி

ஆண்டிமடம்,ஜன.4: ஆண்டிமடம் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று முதல் துவக்கப்பட்டது. இதில் 573 மாணவர்களுக்கு ெகாரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம்-விளந்தை, மருதூர், பூவாணிபட்டு அரசு மேல்நிலைப்பள்ளிகள், ஆண்டிமடம்-விளந்தை, இலையூர், கவரப்பாளையம் உயர்நிலை பள்ளிகளில் நேற்று 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட 9,10,11,12, வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஆண்டிமடம்-விளந்தை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி செலுத்தும் நிகழ்ச்சியில் ஆண்டிமடம் வட்டார மருத்துவ அலுவலர் அசோகச் சக்கரவர்த்தி தலைமை வகித்தார். ஆண்டிமடம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவாஜி, அருளப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொரோனா தடுப்பூசி முகாமில் மாணவர்கள் தாமாகவே முன்வந்து ஆண்டிமடம் வட்டாரத்திற்கு உட்பட்ட பள்ளிகளில் நடைபெற்ற முகாமில் 573 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு ஆர்வமுடன் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இம்முகாமில் ஆண்டிமடம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் தமிழ் முருகன் மற்றும் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags : Andimadam ,
× RELATED அரியலூர் அருகே போட்டோவில் இருந்த தாலியை திருடியவர் கைது