தா.பழூர் ஒன்றியத்தில் இல்லம் தேடி கல்வி திட்டம்

தா.பழூர், ஜன.4:அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்தில் உள்ள கிராம ஊராட்சி சேவை மைய கட்டிடத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தை ஜெயங்கொண்டம் எமஎல்ஏ க.சொ.க.கண்ணன் துவங்கி வைத்தார்.பள்ளி மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசால் இல்லம் தேடி கல்வித் திட்டமானது தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தா.பழூரில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தை எம்எல்ஏ க.சொ.க கண்ணன் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இதில் வட்டார கல்வி அலுவலர்கள் அசோகன் மற்றும் சாந்திராணி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராஜ், குணசேகரன், பள்ளி ஆய்வாளர் செல்வகுமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இல்லம் தேடி கல்வி மோகன், ஊராட்சி மன்ற தலைவர் கதிர்வேல், ஊராட்சி செயலாளர் இளங்கோவன் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: