×

நாகை-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க கலெக்டரிடம் மனு

நாகை, ஜன.4: நாகை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமையில் நடந்தது. இதில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு வந்தது. நாகை தஞ்சை தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க கோரி மனு: சிவசேனா கட்சி மாநில முதன்மை செயலாளர் சுந்தரவடிவேலன் கொடுத்த மனுவில், நாகை தஞ்சை, நாகை கடலூர் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்திற்கு லாயக்கு அற்றதாக உள்ளது. இதனால் சாலை வரி கட்டி பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்திற்கு ஏற்ற சாலையாக இல்லை. எனவே போர்க்கால அடிப்படையில் பழுதடைந்த சாலைகளை சீரமைத்து தரவேண்டியது நெடுஞ்சாலை துறையின் கடமையாகும். சாலைகள் சீரமைக்கவில்லை என்றால் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தஞ்சை மற்றும் விழுப்புரம் திட்ட இயக்குநர் அலுவலகத்தை சிவசேனா கட்சி சார்பில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என தெரிவித்துள்ளார். சிக்கல் பகுதியில் புறகாவல் நிலையம் அமைக்க வேண்டும்: சிக்கல் பகுதியில் புகழ்பெற்ற சிங்காரவேலர் கோயில் உள்ளது. நாகை திருவாரூர் வழித்தடமான இங்கு எந்த நேரமும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. சிங்காரவேலர் கோயிலுக்கு பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். எனவே இந்த பகுதியில் புறகாவல் நிலையம் அமைக்க வேண்டும் என இந்து மக்கள் பொது செயலாளர் பார்த்திபன் மனுவில் தெரிவித்துள்ளார்.

Tags : Collector ,Nagai-Tanjai National Highway ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...