கரூர் மக்கள்பாதையின் வழியாக செல்லும் வாய்க்காலை தூர் வார வேண்டும்

கரூர், ஜன. 4: கரூர் மக்கள் பாதையின் வழியாக செல்லும் வாய்க்காலை தூர்வார தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட படிக்கட்டுத்துறை, மக்கள் பாதை வழியாக வாய்க்கால் செல்கிறது. குடியிருப்புகளின் வழியாக இந்த வாய்க்கால் செல்கிறது.வாய்க்காலின் பெரும்பாலான பகுதி முட்செடிகள் வளர்ந்து மோசமான நிலையில் உள்ளது. இதன் காரணமாக விஷ ஐந்துகளின் நடமாட்டமும் குடியிருப்பு பகுதிகளில் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, இந்த வாய்க்காலை தூர்வாரி சுத்தமாக பராமரிக்க தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு இதனை தூர்வார விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: