×

க.பரமத்தி அருகே ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வெள்ளை எள், கொப்பரை தேங்காய் ஏலம்

க.பரமத்தி, ஜன.4: சாலைபுதூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வெள்ளை எள், கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது. வெள்ளை எள் கிலோவுக்கு ரூ.88 ஏலம் போனதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் கிராம புற பகுதியில் மானாவாரியாக எள், கம்பு, சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. இதனை வெளி மாவட்ட பகுதியில் இயங்கும் கொடுமுடி அருகேயுள்ள சாலைபுதூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கொண்டு செல்கின்றனர். நேற்று 13 மூட்டை எடைக்காக நடந்த ஏலத்தில் வெள்ளை எள் குறைந்த விலையாக கிலோ ரூ.73க்கும் அதிக விலையாக ரூ.88க்கு ஏலம் போனதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கொப்பரை தேங்காய்: இதேபோல் நேற்று கொப்பரை தேங்காய்க்காக நடந்த ஏலத்திற்கு சுமார் 900 மூட்டைகளில் கொப்பரை தேங்காய் கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்பட்டது. கொப்பரை தேங்காய் ஒரு கிலோ சராசரி விலையாக ரூ.90, ஒரு கிலோ கொப்பரை தேங்காய் முதல் ரகம் அதிக விலையாக ரூ.95, ஏலம் போனது. கடந்த வாரத்தை விட கிலோவிற்கு ரூ.2 குறைந்து ஏலம் போனதால் விவசாயிகள் மிகவும் கவலையடைந்துள்ளனர். இதேபோல தேங்காய்களுக்காக நடந்த ஏலத்தில் சுமார் 8,500 தேங்காய்கள் ஏலம் விடப்பட்டன. இதில் ஒரு கிலோ தேங்காய்கள் விலை குறைந்த விலையாக ரூ.22, ஒரு கிலோ தேங்காய் அதிக விலையாக ரூ.28, ஏலம் போனது. கடந்த வார விலையில் மாற்றம் இல்லாமல் ஏலம் போனதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Tags : K. Paramathi ,
× RELATED க.பரமத்தி மயான சாலையில் விபத்து ஏற்படுத்தும் பள்ளங்கள்