திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் குவிந்த பக்தர்கள்

திருவில்லிபுத்தூர், ஜன. 3: புத்தாண்டு மற்று வார விடுமுறையையொட்டி திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர். புத்தாண்டை முன்னிட்டும், வார விடுமுறை என்பதாலும் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு வழக்கத்தைவிட ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்தனர். புத்தாண்டு தினத்தன்று வந்த பக்தர்கள் கூட்டத்தை போல், நேற்றும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஆண்டாள் ரங்கமன்னார் தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர். பல்வேறு ஊர்களிலிருந்து வந்திருந்த பக்தர்கள் பஜனை பாட்டு பாடியபடியே ஆண்டாள்-ரங்க மன்னாரை தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

Related Stories: