அறிவியல் இயக்கம் சார்பில் புத்தகங்களோடு புத்தாண்டு

காளையார்கோவில், ஜன.3:காளையார்கோவிலில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் புத்தாண்டை புத்தகத்தோடு வரவேற்கும் விதமாக புத்தக கண்காட்சியை பேருந்து நிறுத்தம் அருகில் நடத்தியது. இதில் அறிவியல் அறிஞர்கள் சார்ந்த புத்தகங்களும் சாகித்ய அகாடமி விருது பெற்ற கி.ராஜநாராயணன் கதைகளும், பேராசிரியர் மாடசாமியின் குழந்தைகளை புரிந்து கொள்ளக்கூடிய ஆசிரியர்களுக்கு தேவையான புத்தகங்களும் குழந்தை இலக்கிய சாகித்ய அகாடமி பாலபுரஸ்கார் விருது பெற்ற ஆயிஷா நடராஜனின் புத்தகங்களும் மேலும் அறிவியல் இயக்க புத்தகங்கள், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க புத்தகங்களும் இடம்பெற்றிருந்தன.

சிவகங்கை மாவட்ட அறிவியல் இயக்க செயலாளர் ஆரோக்கியசாமி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்ட செயலாளர் சங்கர சுப்பிரமணியன், தமிழ்நாடு அறிவியல் இயக்க சிவகங்கை கிளைத் தலைவர் புலவர் கா.காளிராசா, மருதநாட்டு பலகாரக்கடை முத்துக்குமார், ஓய்வுபெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் அன்புதுரை, தமிழ்நாடு அறிவியல் இயக்க உறுப்பினர்கள் சரவணபாண்டி, சத்தியமூர்த்தி, கிருஷ்ணவேணி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் அப்பகுதியைச் சார்ந்த ஏராளமான புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.

Related Stories: