பரமக்குடி மேலசத்திரம்

பரமக்குடி, ஜன.3: பரமக்குடி மேலசத்திரம் ரேஷன் கடையில் எம்எல்ஏ முருகேசன் திடீர் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சில ரேஷன் கடைகளில், அரிசி உள்ளிட்ட பொருட்கள் தரமற்றதாக உள்ளதாகவும், குடும்ப அட்டைதாரர்களுக்கு கொடுக்க வேண்டிய பருப்புஎண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் கொடுக்க மறுப்பதாகவும் புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து பரமக்குடி தொகுதிக்கு உட்பட்ட ரேஷன் கடைகளில் எம்எல்ஏ முருகேசன் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். நேற்று பரமக்குடி மேலசத்திரத்தில் உள்ள ரேஷன் கடைக்கு நேரில் சென்ற எம்எல்ஏ முருகேசன் அரிசி உள்ளிட்ட பொருட்களை ஆய்வு மேற்கொண்டார்.

இதில் அரிசி தரமற்றதாக இருப்பதாக பொதுமக்கள் எம்எல்ஏவிடம் புகார் தெரிவித்தனர். உடனடியாக வட்டவழங்கல் அலுவலரிடம் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, தரமான பொருட்களை, சரியான எடையில் வழங்க உத்தரவு பிறப்பித்தார். இந்த ஆய்வின்போது பரமக்குடி நகர் தெற்கு பொறுப்பாளர் சேது கருணாநிதி, வார்டு நிர்வாகி கலைவாணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Related Stories: