பரமக்குடி, ஜன.3: தமிழ்நாடு மாநில வேளாண் மை விற்பனை வாரியம் பயிற்சி மையத்தின் சார்பாக, பரமக்குடியில் விவசாயிகளுக்கு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சார்ந்த பயிற்சி அளிக்கப்பட்டது. பரமக்குடி வேளா ண்மை அலுவலர்(வே.வ) உலகு சுந்தரம் பயிற்சியினை துவக்கி வைத்தார். பயிற்சி மையத்தின் வேளாண்மை உதவி இயக்குனர் பிரபாகர் பயிற்சியை வழங்கினார். முன்னதாக உதவி வேளாண்மை அலுவலர் (வே.வ) சங்கீதா வரவேற்றார். ஒழுங்குமுறை விற்பனை கூடம் கண்காணிப்பாளர் மனோகரன், மாவட்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேலாளர் கார்த்திகேயன், மாவட்ட முண்டு மிளகாய் உழவர் உற்பத்தியாளர் நிறுவன இயக்குனர் காந்திராசு ஆகியோர் கலந்துகொண்டு, பயிற்சியின் நோக்கம், விநியோகம், தொடர் மேலாண்மை திட்டம், உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், உழவர்சந்தை, பாரத பிரதமரின் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம், ஏற்றுமதி குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.