தா.பேட்டை பகுதியில் இருவேறு சாலை விபத்து: 2 பேர் பலி

தா.பேட்டை, ஜன.3: தா.பேட்டை பகுதியில் நடந்த இருவேறு சாலை விபத்தில் 2 பேர் பலியாயினர். மண்ணச்சநல்லூர் தாலுகா ராசாம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினகுமார்(42), லாரி டிரைவரான இவர் நாமக்கல் செல்வதற்காக பைக்கில் தா.பேட்டை வழியாக சென்றுள்ளார். ஊரகரை அருகே அண்ணாமலை நகரில் எதிரே வந்த பைக் மீது எதிர்பாராதவிதமாக ரத்தினகுமார் மோதி தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த ரத்தினகுமார் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து தா.பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி வழக்குப்பதிந்து ரத்தினகுமார் உடலை பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

இதே போன்று தா.பேட்டை அருகே ஊரக்கரை கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் பிரசாந்த்(18), லாரி கிளீனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பிரசாந்த் தா.பேட்டை சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு செல்வதற்காக பைக்கில் ஊரக்கரை நோக்கி சென்றுள்ளார். அப்போது நாமக்கல்லில் இருந்து துறையூர் நோக்கி வந்த அரசு பஸ் பைக் மீது மோதியது. இதில் பிரசாந்த் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து தா.பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து பிரசாந்த் உடலை பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அரசு பஸ் டிரைவர் ரெங்கசாமியை கைது செய்து விசாரணை மேற் கொண்டுள்ளனர்.

Related Stories: