டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க வேண்டும்

திருவாரூர், ஜன. 3: டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர் சங்க நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நித்திரன் தலைமையில் திருவாரூர் சிஐடியூ சங்க அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. சிஐடியூ மாவட்ட செயலாளர் முருகையன், டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமான தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். கூட்டத்தில், சுமைப்பணி தொழிலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் உரிய அங்கீகார அடையாள அட்டை யை வாங்க வேண்டும். தொழிலாளர் நலன் கருதி டாஸ்மாக் குடோனில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி மற்றும் பெட்டி அமைத்து தர வேண்டும். தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தை உடனடியாக துவக்க வேண்டும். வேலை வாய்ப்பு அலுவலகம், டாஸ்மாக் மற்றும் மருத்துவ கிடங்கு செல்லும் சாலையை செப்பனிட்டு புதிதாய் அமைத்து தர வலியுறுத்தி வரும் 21ம் தேதி மன்னை சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக கார்த்தி வரவேற்றார். வேல்முருகன் நன்றி கூறினார்.

Related Stories: