திருவாரூரில் மாநில அளவிலான மகளிர் செஸ் சாம்பியன் ஷிப் போட்டி

திருவாரூர், ஜன. 3: திருவாரூரில் நடைபெறும் மாநில அளவிலான மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளை எம்எல்ஏ பூண்டி கலைவாணன் துவக்கி வைத்தார். திருவாரூர் மாவட்ட சதுரங்க கழகத்தின் வெள்ளி விழாவை முன்னிட்டு 50 வது தமிழ்நாடு மாநில மகளிர் செஸ் சாம்பியன் ஷிப் போட்டிகள் நேற்று முதல் வரும் 6ம் தேதி வரை 9 சுற்றுகளாக திருவாரூரில் நடைபெறுகிறது.இதில் சென்னை, மதுரை, கோவை, நாகர்கோயில், திருவாரூர் உள்ளிட்ட 24 மாவட்டங் களைச் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்று விளையாடுகின்றனர். இப்போட்டிகளில் முதல் நான்கு இடங்களை பெரும் வீரர்கள் தேசிய அளவிலான போட்டிக்கு தமிழகத்தின் சார்பில் தேர்வு செய்து அனுப் பப்பட உள்ளனர்.இந்த நிலையில் கனகராஜன் தலைமையில் திருவாரூரில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பா ளராக எம்எல்ஏ பூண்டி கலைவாணன் கலந்து கொண்டு 50வது தமிழ்நாடு மாநில மகளிர் செஸ் சாம்பியன் ஷிப் போட்டி களை துவக்கி வைத்தார். நகர திமுக செயலாளர் வாரை பிரகாஷ், மாவட்ட சதுரங்க கழகத் தலைவர் சாந்தகுமார், இணை செயலர்கள் வாழ்த்தி பேசினர். முன்னதாக தமிழ்நாடு சதுரங்ககழகம் இணைச் செயலாளர் பால குணசேகரன் வரவேற்றார். திருவாரூர் வட்ட சதுரங்க கழக செயலாளர் அசோகன் நன்றி கூறினார்.

Related Stories: