×

தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிப்பு பாபநாசத்தில் திமுக மகளிரணி ஆலோசனை கூட்டம்

கும்பகோணம், ஜன.3:  கும்பகோணம் அருகே பாபநாசத்தில் திமுக மகளிரணி அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் ஒன்றிய பேரூர் திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சுபா திருநாவுக்கரசு தலைமை வகித்தார். மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் சுமதி ரமேஷ், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் சுமதி கண்ணதாசன், பாபநாசம் ஒன்றிய அமைப்பாளர்கள் ஜெயசித்ரா, ராமாமிர்தம், சுமதி குணசேகரன், பாபநாசம் மகளிரணி செயலாளர் பவானி, அய்யம்பேட்டை பேரூர் மகளிரணி செயலாளர் சத்தியபிரியா, பாபநாசம் தெற்கு ஒன்றிய செயலாளர் நாசர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இக்கூட்டத்தில் பாபநாசம் ஒன்றியத்தில் அனைத்து ஊராட்சி பகுதிகளிலும், பேரூராட்சி பகுதிகளிலும் திமுக மகளிரணிக்கு அதிக அளவில் தீவிர உறுப்பினர்களை சேர்ப்பது என தீர்மானிக்கப்பட்டது.

Tags : DMK ,Papanasam ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி