கும்பகோணத்தில் அனுமன் ஜெயந்தி விழா

கும்பகோணம், ஜன.3: கும்பகோணம் விஸ்வரூப ஜெயமாருதி சன்னிதானத்தில் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது. கும்பகோணம் பாலக்கரை காமராஜ் நகரில் அமைந்துள்ள விஸ்வரூப ஜெயமாருதி சன்னிதானத்தில் மார்கழிமாத அமாவாசையான நேற்று  ஹனுமத் ஜெயந்தி விழா நடைபெற்றது. இதில் தமிழகத்தில் தொடர் கனமழை குறையவும், விவசாயிகளின் வாழ்வாதாரம் தடையின்றி சிறக்க வேண்டி சிறப்பு பிரார்த்தனையும், சித்தமல்லி ராம் பட்டாச்சாரியார் தலைமையில் சிறப்பு ஹோமங்கள் மற்றும் பூஜைகளும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி நாச்சியார்கோவில் ரவிச்சந்திரன் நாதஸ்வர குழுவினரின் மங்கள இசையுடன் நடைபெற்றது. தொடர்ந்து விழாவில் 11 அடி உயரம் கொண்ட  விஸ்வரூப ஆஞ்சநேயர் வடைமாலையுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் ஏராளமான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை விஸ்வரூப ஜெயமாருதி சன்னிதானம் நிர்வாகிகள் ராமன் பட்டர், மோகன் பட்டர், பாலாஜி பட்டர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

Related Stories: