திருமயம் அருகே பள்ளத்தில் பாய்ந்த அரசு பஸ்

திருமயம். ஜன.3: திருமயம் அருகே அரசு பஸ் விபத்துக்குள்ளான நிலையில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். மதுரையில் இருந்து திருமயம் வழியாக தஞ்சாவூருக்கு அரசு பஸ் பயணிகளை ஏற்றிக்கொண்டு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை 5 மணி அளவில் வந்து கொண்டிருந்தது. அப்போது திருமயம் அருகே உள்ள சமத்துவபுரம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, சாலையில் திடீரென மாடுகள் குறுக்கே சென்றது. இதனால் டிரைவர் பிரேக் அடித்து பஸ்சை நிறுத்த முயற்சி செய்தார். இதனால் பஸ் கட்டுப்பாட்டை இழந்து சிறிது தூரம் இழுத்துச் சென்று சாலையோரம் இருந்த பள்ளத்தில் இறங்கி சாய்ந்து நின்றது. இதனால் பஸ்ஸில் இருந்த பயணிகள் அதிஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். இதனைத் தொடர்ந்து பஸ்ஸில் பயணம் செய்த பயணிகளை மாற்று பஸ் மூலம் ஏற்றி அனுப்பி வைத்தார்கள். தகவலறிந்த திருமயம் வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார் பார்வையிட்டு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

Related Stories: