×

காய்கறி மார்க்கெட்டிலுள்ள கடைகளை ஒதுக்க வேண்டும் மேலூர் வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தல்

மேலூர், ஜன.3: மேலூர் தினசரி காய்கறி மார்க்கெட்டில் புதிய கடைகளை விரைந்து அமைத்து, கடைகளை ஒதுக்க வேண்டும் என வியாபாரிகள் சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மேலூர் செக்கடி பகுதியில் 30 வருடங்களுக்கு முன்பு தினசரி காய்கறி மார்க்கெட் கடைகள் அமைக்கப்பட்டது. மக்கள் தொகைக்கு ஏற்ப இக்கடைகள் போதுமானதாக இல்லை என கூறி, மார்க்கெட் செல்லும் சாலையின் இருபுறமும் சாலை ஓர காய்கறி கடைகள் ஏராளமாக முளைத்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து எப்போதும் சிக்கலான நிலையில் காணப்படும். காய்கறி கடைகளின் கட்டிடம் மிகவும் சேதமாகி, பயன்படுத்த முடியாத நிலைக்கு செல்ல, அங்கு புதிய கடைகள் கட்ட உள்ளதாக நகராட்சி சார்பில் சில வருடங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

ஆனால் இதுவரை அதற்கான நடவடிக்கை தான் இல்லை. புதிதாக கட்டப்பட உள்ள காய்கறி கடைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளை மேலூர் காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்திற்கு ஒதுக்க வேண்டும் என வியபாரிகள் சங்கம் சார்பில் நேற்று மேலூர் நகராட்சி கமிஷனர் ஆறுமுகத்திடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மனுவில், வியாபாரிகள் சங்கத்திற்கு புதிய கடைகளில் நூற்றுக்கும் மேற்பட்டவைகள் ஒதுக்க வேண்டும். மேலும் அவ்விடத்தில் தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என கூறப்பட்டது. இம்மனுவினை வியாபாரிகள் சங்க தலைவர் மணவாளன், செயலாளர் காஜாமைதீன், பொருளாளர் இளங்கோவன் மற்றும் நிர்வாகிகள் சேர்ந்து சென்று கொடுத்தனர்.

Tags : Melur Traders Association ,
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ