தா.பழூர் பகுதியில் கனமழையால் கடலை சாகுபடி பாதிப்பு

தா.பழூர், ஜன.3: அரியலூர் மாவட்டம் தா.பழூரைச் சுற்றியுள்ள காரைக்குறிச்சி, இருகையூர், வேணாநல்லூர், சிலரால் சோழமாதேவி, அணைக்குடம், வேம்புகுடி, விக்கிரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தற்சமயம் கார்த்திகைப் பட்டத்தில் விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களில் கடந்த வாரம் நிலக்கடலை பயிரிட்டனர். நிலக்கடலை பயிரிட்டு ஒரு வாரமே ஆன நிலையில் அவை மண்ணில் சிறிதளவு வளர்ந்தும் வராமலும் உள்ள நிலையில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையால் அனைத்து பகுதிகளிலும் பயிரிடப்பட்டிருந்த நிலக்கடலை சாகுபடி அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் கடலை சாகுபடி பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனாலும் பயிர்கள் வளராமல் திட்டுகள் காணப்படுவதோடு பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஒரு ஏக்கர் விவசாய நிலத்திற்கு 25 முதல் 30 ஆயிரம் வரை செலவு செய்து கடலை பயிர் விவசாயம் செய்துள்ள விவசாயிகள் இதனால் மிகவும் கவலை அடைந்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறும்போது தமிழக அரசின் வேளாண்மை துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் நேரில் வந்து பார்வையிட்டு பாதிக்கப்பட்டுள்ள பயிர்களை கண்டறிந்து பாதிப்படைந்துள்ள விவசாய நிலங்களுக்கு தக்க நிவாரணம் வழங்கிட வேளாண்மை துறை அதிகாரிகளும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடலை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: