எட்டயபுரம் அருகே லோடு ஆட்டோ கவிழ்ந்து 11 பேர் படுகாயம்

எட்டயபுரம், ஜன.3:எட்டயபுரம் அருகே லோடு ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் படுகாயம் அடைந்தனர். தூத்துக்குடி அருகேயுள்ள மறவன்மடம் பாலங்கரை பகுதியைச் சேர்ந்த நயினார் மகன் ரமேஷ்(41). இவர், லோடு ஆட்டோவில் தனது உறவினர்கள் சுமார் 16 பேருடன் நேற்று காலை இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு சென்றார். அங்கு சுவாமி தரிசனம் செய்துவிட்டு நேற்று மாலை லோடு ஆட்டோவில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

எட்டயபுரம் அருகே தாப்பாத்தி விலக்கு பகுதியில் வரும் போது லோடு ஆட்டோவின் பின்பக்க டயர் வெடித்தது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ேலாடு ஆட்டோ அருகிலுள்ள சிறிய பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் 11 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்த மாசார்பட்டி போலீசார்  சம்பவ இடத்துக்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக 11 பேரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து மாசார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து லோடு ஆட்டோ டிரைவர் தட்டப்பாறை கீழே தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மகன் சுடலைமணி என்பவரிடம் விசாரணை நடத்தினர்.

Related Stories: