திருச்செந்தூர் கோயிலுக்கு பறவை காவடி எடுத்து பக்தர் நேர்த்திகடன்

திருச்செந்தூர், ஜன. 3: திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு ஆலங்குளம் பக்தர்கள் பறவை காவடி எடுத்து நேர்த்தி கடனை செலுத்தினார். திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு தென்காசி மாவட்டம் ஆலங்குளம் நல்லூரை சேர்ந்த பக்தர்கள் ரமேஷ்குமார், குருசாமி தலைமையில் பறவை காவடி எடுத்து வருவது வழக்கம். அதைபோல் 3வது ஆண்டை முன்னிட்டு நேற்று ஆலங்குளம் நல்லூரில் இருந்து பக்தர்கள் பறவை காவடியுடன் புறப்பட்டு நெல்லை வழியாக இரவு திருச்செந்தூருக்கு வந்தனர். பறவை காவடி குமாரபுரம், காமராஜ் சாலை, வடக்கு ரதவீதி, சன்னதி தெரு வழியாக கோயிலை வந்தடைந்தனர். பின்னர் அவர்கள் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: