×

செய்துங்கநல்லூர் அருகே 36 கிலோ புகையிலை பொருட்கள், பைக் பறிமுதல் நெல்லையைச் சேர்ந்த இருவர் கைது

செய்துங்கநல்லூர், ஜன.3:தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின் பேரில் வைகுண்டம் டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையில் எஸ்ஐ சதீஷ், குணசேகரன், ஆனந்தராஜ், முத்துக்குமார், நாராயணசாமி, ஜான், அந்தோணிராஜ், பட்டாபிராமன், வாசன், வாழைசெல்வம் உள்ளிட்ட தனிப்படை போலீசார்செய்துங்கநல்லூரில் ரோந்து சென்றனர். அப்போது நாங்குநேரி அருகேயுள்ள தென்னவநேரியைச் சேர்ந்த முருகேசன் மகன் லிங்கபெருமாள்(26), வள்ளியூர் சந்திரன் மகன் சாம்ராஜ்(23) ஆகியோர் தாதன்குளம் ரயில்வேகேட் அருகே சற்று தொலைவில் 3 சாக்குமூடைகளுடன் நின்று கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் சாக்கு மூடைகளை போட்டுவிட்டு பைக்கில் தப்பியோட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். இதில், அவர்கள் பெங்களூருவில் ஒருவரிடம் குறைந்த விலைக்கு புகையிலை பொருட்களை வாங்கி தனியார் பேருந்தில் நெல்லைக்கு கொண்டு வந்து, பின்னர் வைகுண்டம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கடைகளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக பைக்கில் கொண்டு வந்து அங்குள்ள பழைய கட்டிடத்தில் மறைத்துவைத்து ஒவ்வொரு மூடையாக எடுத்து செல்வதாக தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் லிங்கபெருமாள், சாம்ராஜை கைது செய்து அவர்களிடமிருந்து 36கிலோ புகையிலை பொருட்கள், பைக்கையும் பறிமுதல் செய்தனர். செய்துங்கநல்லூர் வந்த எஸ்பி ஜெயக்குமார், பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களை ஆய்வு செய்தார். வைகுண்டம் டிஎஸ்பி வெங்கடேஷ், பயிற்சி டிஎஸ்பி சியாமளா தேவி, இன்ஸ்பெக்டர் அருள் ஆகியோர் உடனிருந்தனர். இதுகுறித்து செய்துங்கநல்லூர் சப்.இன்ஸ்பெக்டர் சதீஷ் வழக்குபதிவு செய்து இருவரையும் சிறையில் அடைத்தார்.

Tags : Cheytunkanallur ,
× RELATED செய்துங்கநல்லூரில்...