இடையகோட்டை நங்காஞ்சி அணை நிரம்பியது அமைச்சர் அர.சக்கரபாணி தண்ணீர் திறப்பு

ஒட்டன்சத்திரம், ஜன. 3: ஒட்டன்சத்திரம் வட்டம், இடையகோட்டை நங்காஞ்சி அணையில் நீர் நிரம்பி, முழு கொள்ளளவை எட்டியது.  இதையடுத்து தமிழக முதல்வர் நேற்று முதல் வினாடிக்கு 15 கன அடி என்ற அளவில் நாற்பத்தி ஐந்து நாட்களுக்குதண்ணீர் திறந்துவிடப்படும் என்று அறிவித்திருந்தார். அவரின் உத்தரவுக்கிணங்க உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி அணைை நேற்று திறந்து வைத்து மலர் தூவினார்.

இதன் பின் அவர் கூறியதாவது: இந்த அணையின் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் இடையகோட்டை, வலையபட்டி, நாரப்பநாயக்கன்பட்டி, கோவிந்தாபுரம், சின்னக்காம்பட்டி உள்ளிட்ட 2615 ஏக்கர் விவசாய நிலங்களும், கரூர் மாவட்டத்தில் சேந்தமங்கலம் கிழக்கு, சேந்தமங்கலம் மேற்கு, குறிக்காரன்வலசு, குறும்பபட்டி, பழனிக்கவுண்டன்வலசு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 3635 ஏக்கர் விவசாய நிலங்களும் என மொத்தம் 6250 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என்று கூறினார்.

நிகழ்வில் கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், ஒன்றிய செயலாளர்கள் ஜோதீஸ்வரன், தர்மராஜன், ஒன்றிய பெருந்தலைவர் அய்யம்மாள், வட்டாட்சியர் முத்துச்சாமி, செயற்பொறியாளர் கோபி, உதவி பொறியாளர்கள் தமிழ்செல்வன், வெங்கடாசலம், சிவப்பிரகாசம், உதயகுமார், முருகன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் செல்வி செல்லமுத்து, ஜென்சி செல்வராஜ், ஊராட்சிமன்ற தலைவர் சரவணன், ஊராட்சி செயலர் வெள்ளைச்சாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories: