நாகர்கோவில், ஜன.3: குமரி கடல் பகுதியில் இன்று பலத்த காற்று வீசும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் இந்த பகுதியில் இன்று மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.