கடலூர் முதுநகர் அருகே தூக்குபோட்டு மீன்பிடி தொழிலாளி சாவு

கடலூர், ஜன. 3: கடலூர் முதுநகர் அருகே உள்ள வசந்தராயன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் மகன் பிரபாகரன் (31). மீன்பிடி தொழிலாளியான இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் செல்லங்குப்பத்தை சேர்ந்த அனிதா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அனிதா பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து பிரபாகரன் நஞ்சலிங்கம்பேட்டையை சேர்ந்த முத்துலட்சுமி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் வசித்து வந்தார். முத்துலட்சுமியின் கணவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டதாக தெரிகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக பிரபாகரன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். சம்பவத்தன்று இரவு வீட்டில் உள்ள அறையில் தூங்க சென்ற பிரபாகரன், காலை வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு அவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்த புகாரின்பேரில்  கடலூர் துறைமுகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: