×

அனுமதி பெறாமல் கொடி ஏற்ற முயற்சி விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை

நெல்லிக்குப்பம், ஜன. 3: நெல்லிக்குப்பம் அருகே பாலூர் கடை தெருவில், பேருந்து நிறுத்தம் அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், தங்கள் கட்சி கொடியை ஏற்றுவதற்கு வந்தனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நடுவீரப்பட்டு போலீசார், அனுமதி பெறாமல் கட்சி கொடி ஏற்றக்கூடாது என தடுத்து நிறுத்தினர். இதையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சி கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைச்செல்வன், கிழக்கு மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன், இளைஞர் எழுச்சி பாசறை வேங்கடபதி, ஒன்றிய செயலாளர் தலித்கோபால், துணை செயலாளர் மணி மற்றும் நிர்வாகிகள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். தகவல் அறிந்து வந்த கடலூர் கோட்டாட்சியர் கவியரசு அதியமான், தாசில்தார் பிரகாஷ், பண்ருட்டி டிஎஸ்பி சபியுல்லா, கடலூர் டிஎஸ்பி கரிகால் பாரிசங்கர், நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் அசோகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயபாஸ்கரன், அண்ணாமலை மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட முயன்றவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.ஒரு வாரத்திற்குள் சமாதான கூட்டம் நடத்தி தீர்வு காணப்படும் என கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் பாலூர் பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

Tags : Liberation Tigers of Tamil Eelam ,LTTE ,
× RELATED பாசிச கும்பலிடமிருந்து நாட்டை மீட்க.....