சீர்காழி சட்டைநாதர் கோயிலில் 30 ஆண்டுக்கு பிறகு கும்பாபிஷேக பணி

சீர்காழி, ஜன.3: சீர்காழி சட்டைநாதர் கோயிலில் 30 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் கும்பாபிஷேக பணிகளை தருமபுர ஆதீனம் ஆய்வு செய்தார். சீர்காழி சட்டைநாதர் கோயிலில் பிரம்மபுரீஸ்வரர் திருநிலைநாயகி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர் மேலும் இக்கோயில் பிரம்ம தீர்த்தகுளக்கரையில் திருஞானசம்பந்தருக்கு சிவன் பார்வதி நேரில் தோன்றி காட்சி கொடுத்து பார்வதி திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் கொடுத்த புகழ்பெற்ற பெற்ற ஸ்தலமாகும். இத்தகைய புகழ்பெற்ற கோயிலில் 30 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேக பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. கும்பாபிஷேகப் பணிகளை தருமபுர ஆதீனம் ல மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கோயில் நிர்வாகி செந்தில், வழக்கறிஞர் பாலாஜி, காங்கிரஸ் கட்சி நிர்வாகி அன்பு மற்றும் பக்தர்கள் உடன் இருந்தனர்.

Related Stories: