×

டெங்குவால் மக்கள் பாதிப்பு கழிவுநீர் சாக்கடையை சுத்தம் செய்து கொசு மருந்து அடிக்க வேண்டும்

காரைக்கால், ஜன.3: காரைக்கால் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக்கழக செயலாளர் முஹம்மது சித்திக் தலைமையில், அமமுகவினர் காரைக்கால் நகராட்சி ஆணையர் மற்றும் நலவழித்துறை துணை இயக்குனர் ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், காரைக்கால் மாவட்டத்தில் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் மக்கள் டெங்கு காய்ச்சல் மற்றும் வாந்தி, பேதி போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, அனைத்து பகுதிகளில் உள்ள கழிவுநீர் சாக்கடைகள் மற்றும் கழிவுநீர் நீங்கி நிற்கும் இடங்களை சுத்தம் செய்து கொசு மருந்து அடிக்க ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இச்சந்திப்பின்போது அவைத் தலைவர் முருகையன், நகர செயலாளர் பாலதண்டாயுத பாணி, தொகுதி செயலாளர்கள் முஹம்மது ரஹ்மான் (காரைக்கால் தெற்கு), சர்புதீன் (திருநள்ளாறு), எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் முஹம்மது அலி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags :
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...