×

611 பேருக்கு பணி ஆணை பதிவு செய்யாமல் இயங்கினால் இறால் பண்ணை உரிமையாளர் மீது நடவடிக்கை

நாகை, ஜன.3: நாகை மாவட்டத்தில் பதிவு செய்யாமல் இயங்கும் இறால் பண்ணை உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார். கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு சட்டம் 2005-ன் படி கடலோர பகுதிகளில் உள்ள அனைத்து உவர்நீர் இறால் பண்ணைகளும், கடல்சார் நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையத்தில் பதிவு செய்த சான்று பெற வேண்டும். பதிவு செய்யப்பட்ட இறால் பண்ணைகள் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பதிவினை புதுப்பிக்க வேண்டும். பதிவு செய்யாமல் இயங்கும் இறால் பண்ணை உரிமையாளர்கள் மீது ரூ. 1 லட்சம் வரை அபராதம் அல்லது 3 ஆண்டு சிறை தண்டனை அல்லது இரண்டும் வழங்க வழிவகை உள்ளது. எனவே நாகை மாவட்டத்தில் பதிவு செய்யாமல் மற்றும் பதிவினை புதிப்பிக்காமல் இயங்கும் உவர்நீர் இறால் பண்ணைகள் உடன் பதிவு செய்ய வேண்டும். பதிவினை புதுப்பிக்க காலதாமதம் இன்றி விண்ணப்பிக்க வேண்டும். எனவே நாகை கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர், நாகை (தெற்கு) அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பத்தை பெற்று இறால் பண்ணைகள் பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு