×

கரூர் உழவர்சந்தை நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் 20 ஆயிரம் டன் நெல்கொள்முதல் செய்ய திட்டம் : கலெக்டர் தகவல்

கரூர், ஜன. 3: கரூர் மாவட்டத்தில் நேரடி நெல்கொள் முதல் நிலையங்கள் மூலம் 20 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என கலெக்டர் பிரபுசங்கர் கூறினார். கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் நச்சலூர், பணிக்கம்பட்டி, பொய்யாமணி ஆகிய பகுதிகளில் நேரடி நெல் நிலையங்கள் துவங்கப்பட்டதை மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் பணிக்கம்பட்டியில் அமைந்துள்ள நேரடி கொள்முதல் நிலையத்தை பார்வையிட்டார். நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டுளய்ள நெல்களை உடனுக்குடன் எடுத்துச் சென்று ஒழுங்கு முறை விற்பனைக்கூடம் உள்ளிட்ட பாதுகாப்பன இடங்களில் வைக்க வேண்டும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை குறித்து விவசாயிகளிடம் முறையாக எடுத்துக் கூறி, ஏதேனும் இடர்ப்பாடுகள் இருந்தால் அவற்றை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். நெல் அளவிடும் இடம், மூட்டைகளில் பிரித்து கட்டும் கருவிகளை பார்வையிட்டு கலெக்டர் பின்னர் தெரிவித்துள்ளதாவது:

குளித்தலை வட்டத்தில் நங்கவரம், நச்சலூர், பணிக்கம்பட்டி, நெய்தலூர், இனுங்கூர், குமாரமங்கலம், சத்தியமங்கலம், கே.பேட்டை, தோகைமலை, பொய்யாமணி ஆகிய 10 இடங்களிலும், கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் மேட்டுமகாதானபுரம், லாலாப்பேட்டை, கட்டளை, வீரராக்கியம், கோவக்குளம் ஆகிய 5 இடங்களிலும், மண்மங்கலம் வட்டத்தில் மொச்சகொட்டாம்பாளையம், பஞ்சமாதேவி, பள்ளபாளையம் ஆகிய 3 இடங்களிலும், புகளூர் வட்டத்தில் அஞ்சூர், தொட்டம்பட்டி ஆகிய 2 இடங்களிலும், அரவக்குறிச்சி வட்டத்தில் சின்னதாராபுரம் என 21 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், நச்சலூர், பணிக்கம்பட்டி, பொய்யாமணி ஆகிய முன்று இடங்களிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் துவங்கப்பட்டுள்ளது.

இதில், நச்சலூர், பணிக்கம்பட்டி, பொய்யாமணி ஆகிய இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் துவங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுதும் புதிய நடைமுறையாக நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு நெல் கொண்டு வரும் விவசாயிகள் முன்கூட்டியே ஆன்லைனில் பதிவு செய்யும் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் அதிகளவிலான விவசாயிகள் வந்து காத்திருப்பதை தவிர்க்கும் வகையிலும், கொண்டு வரும் நெல்கள் வீணாகாமல் உடனுக்குடன் அளந்து பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்வதற்கும் வசதியாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தில் மொத்ம் 14,474 எக்டேர் நிலப்பரப்பில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நேரடி கொள்முதல் நிலையங்களின் மூலம் 20ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை விவசாயிகள் நேர நெல் கொள்முதல் நிலையங்களில் ஆன்லைன் வாயிலாக பதிவு செய்திட போதிய வசதிகள் செய்து தரப்படும். மேலும், எவ்வாறு ஆன்லைன் வாயிலாக பதிவு செய்வது என்பது குறித்த தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு கற்றுக் கொடுக்க போதிய ஏற்பாடு செய்யப்படும். அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் வேளாண் சார்ந்த திட்டங்களை அனைத்து விவசாயிகளும் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். நிகழ்வில், குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பாதேவி, நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் யசோதா ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Karur Farmers Market Direct Purchase Centers ,
× RELATED பிளாஸ்டிக் பையால் ஏற்படும் மாசு வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு