விடுமுறை தினத்தையொட்டி அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்

திருவண்ணாமலை, ஜன.3: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய நேற்று நீண்ட வரிசையில் காத்திருந்தனர். விடுமுறை தினத்தையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நேற்று வழக்கத்தை விட பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்பட்டது. கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால், பொது தரிசனம் மற்றும் கட்டண தரிசன வரிசையில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் வருகை அதிகரித்திருந்ததால், கோயிலில் அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டிருந்தது. மேலும், விடுமுறை தினத்தையொட்டி நேற்று அண்ணாமலையார் கோயில் வளாகத்தில் சென்னையை சேர்ந்த மார்க்கசகாய ஈஸ்வரர் உழவாரப்பணி குழு சார்பில் தூய்மை பணி நடைபெற்றது. இத்தூய்மை பணியில் 50க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டிருந்தனர்.

Related Stories: