×

திருவேற்காடு நகராட்சி சார்பில் திட, திரவ கழிவை கையாள்வது குறித்து கட்டுரை போட்டிகள்: முதல் பரிசு ரூ.5 லட்சம்

பூந்தமல்லி: திட மற்றும் திரவ கழிவுகளை கையாள்வது குறித்து கட்டுரை போட்டிகள் திருவேற்காடு நகராட்சி சார்பில் நடத்தப்பட உள்ளது. இதில், முதல் பரிசு ரூ.5 லட்சம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருவேற்காடு நகராட்சி ஆணையர் ரமேஷ் கூறுகையில், `மத்திய அரசின் வழிமுறைப்படி தமிழகம் முழுவதும் தூய்மை இந்தியா இயக்கம் 2.0 என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் புதுமையான தொழில்நுட்ப சவால் என்னும் கட்டுரை போட்டி, தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி திருவேற்காடு நகராட்சியிலும் நடத்தப்படுகிறது.

திட மற்றும் திடக் கழிவுகளை கையாள்வதை கருப்பொருளாக கொண்டு, சோசியல் இன்குளூசின், ஜீரோ டம்ப், பிளாஸ்டிக் வேஸ்ட் மேனேஜ்மென்ட், டிரான்ஸ்பரன்சி என 4 தலைப்புகளில் இப்போட்டி நடைபெறுகிறது. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்படும் கட்டுரைகளை ஜனவரி 6ம் தேதிக்கும் முன்பாக திருவேற்காடு நகராட்சிக்கு இமெயில் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். இப்போட்டியில் மாநில அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ.5 லட்சம். 2ம் பரிசு ரூ.2.5 லட்சம், 3ம் பரிசு ரூ.1.5 லட்சம், 4ம் பரிசு ரூ.1 லட்சம். 5ம் பரிசு ரூ.75 ஆயிரம் வழங்கப்படுகிறது. மேலும் நகராட்சி அளவில் வெற்றி பெறுவதற்கான பரிசுத்தொகை முதல் பரிசு ரூ.10,000, 2ம் பரிசு ரூ.5000, 3ம் பரிசு ரூ.3000 வழங்கப்படும். எனவே அனைவரும் இப்போட்டியில் கலந்துகொள்ளலாம்’ என்றார். அப்போது, நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட் அருள்ராஜ் உடனிருந்தார்.

Tags : Thiruverkadu Municipality ,
× RELATED திருவேற்காடு நகராட்சி சார்பில் திட,...