கூடலூர் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு ஆலோசனை வழங்கலாம் ஆணையாளர் அறிவிப்பு

கூடலூர், ஜன.3: கூடலூர் நகராட்சி ஆணையாளர் ராஜேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கூடலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், வீடுகள் கடைகளில் சேகரமாகும் குப்பைகளை தெருக்களில் கொட்டி சுகாதார சீர்கேடு ஏற்படுவதை தடுக்கும் வகையில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நகர் பகுதிகளில் சேகரமாகும் திடக்கழிவு மற்றும் திரவக் கழிவுகளை அப்புறப்படுத்துவதற்காக நவீன புதுமையான தொழில்நுட்ப ஆலோசனைகளை செயலாக்க திட்ட அறிக்கையாக நகராட்சி அலுவலகத்துக்கு வழங்கலாம்.  

பள்ளி கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், தனிநபர்கள், தொண்டு அமைப்புகள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் புதுமையான ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. தமிழக அளவில் தேர்வு செய்யப்படும் 5 புதுமையான ஆலோசனைகளுக்கு சான்றிதழ் மற்றும் பணப் பரிசுகள் வழங்கப்பட உள்ளது. இதனை ஜனவரி 6ம் தேதிக்குள் commr.gudalur-tpr@tn.gov.in என்ற மின்னஞ்சலில் அனுப்பி வைக்கலாம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Stories: