×

பழவேற்காடு அருகே நடுக்கடலில் பைபர் படகில் தீ: மீனவர்கள் 6 பேர் மீட்பு

சென்னை: சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்த மீனவர் முருகன். இவரது பைபர் படகில் காசிமேட்டை சேர்ந்த 6 மீனவர்கள் நேற்றுமுன்தினம் காலையில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். மதியம் பழவேற்காடு அருகே நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது சமைப்பதற்காக காஸ் அடுப்பை பற்ற வைத்தபோது கசிவு ஏற்பட்டு திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. தீ மளமளவென பரவியதால் அதிர்ச்சியடைந்த மீனவர்கள், கடலில் குதித்து தத்தளித்தனர். இதில் மீனவர் குப்பனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதை பார்த்ததும், அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த பழவேற்காடு மீனவர்கள் விரைந்து சென்று கடலில் தத்தளித்த மீனவர்கள் 6 பேரையும் மீட்டனர். தகவலறித்து கடலோர காவல்படையினர் விரைந்து வந்து படகில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். பின்னர், மீனவர்களை படகில் ஏற்றி காசிமேடு மீன்பிடி துறைமுகத்துக்கு அனுப்பி வைத்தனர். இந்த தீவிபத்தில் வலைகள், ஐஸ் பாக்ஸ், சமையல் பாத்திரம் உள்ளிட்ட ரூ3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது….

The post பழவேற்காடு அருகே நடுக்கடலில் பைபர் படகில் தீ: மீனவர்கள் 6 பேர் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Piper ,Chennai ,Murugan ,Kasimedu, Chennai ,Casimate ,
× RELATED யூடியூபர் குறித்து தகாத வார்த்தையில்...