×

பணம் கொள்ளை போவதை தடுக்க டாஸ்மாக் கடைகளில் லாக்கர்

கோவை, ஜன.3: தமிழகத்தில் 6,350 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளது. இங்கு தினமும் சுமார் 60 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனையாகிறது. மதுபான கடைகளில் மது விற்பனை செய்த பின்னர் இரவு நேரத்தில் பணம் கொண்டு போவதை கண்காணிக்கும் திருடர்கள் தாக்குதல் நடத்தி பணம் பறித்து செல்வது அவ்வப்போது நடக்கிறது.  கடந்த ஆண்டில் 145  டாஸ்மாக் கடைகளில் திருட்டு, கொள்ளை நடந்தது. 23 டாஸ்மாக் ஊழியர்களிடம் இருந்து பணம் பறிக்கப்பட்டதாக வழக்கு பதிவானது. வழிப்பறி ெகாள்ளையர்கள் கத்தி, அரிவாளுடன் டாஸ்மாக் ஊழியர்களை தாக்கி பணம் பறிப்பது அதிகமானதால் ஊழியர்கள் அச்சமடைந்தனர்.  

இதைத்தொடர்ந்து, கடையில் வசூலாகும் பணத்தை இரவில் கொண்டு செல்லாமல் கடைகளில் லாக்கர் அமைத்து அதில் பணத்தை வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநில அளவில் முதல் கட்டமாக 2,825 டாஸ்மாக் கடைகளில் லாக்கர் அமைக்கப்பட்டுள்ளது. 300 கிலோ எடையில் இரும்பு லாக்கர் அமைத்து அதை தரையில் பதித்து வைத்துள்ளனர். இதர கடைகளிலும் இதுபோன்ற லாக்கர் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tags : Tasmac ,
× RELATED டாஸ்மாக் கடையை உடைக்க முயன்ற கைதான நான்கு வாலிபர்களுக்கு சிறை