பொத்தகாலன்விளை ஆலயத்தில் கேரள முன்னாள் முதல்வர் மகன் பிரார்த்தனை

சாத்தான்குளம், ஜன. 1: பொத்தகாலன்விளை புனித திருக்கல்யாண மாதா ஆலயத்தில் கேரள முன்னாள் முதல்வர் மகன் பிரார்த்தனை செய்தார். சாத்தான்குளம்  அருகே பொத்தகாலன்விளையில் பிரசித்தி பெற்ற  புனித திருக்கல்யாண மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்துக்கு தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். மாதத்தின் முதல் சனிக்கிழமை  சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டு வருகிறது. இதில்  குமரி, கேரளா பகுதியில் இருந்து ஏராளமானோர் பங்கேற்பர்.

இந்நிலையில் நேற்று பொத்தகாலன்விளை புனித திருக்கல்யாண மாதா ஆலயத்துக்கு   கேரளா மாநில  காங்கிரஸ் முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டியின்  மகன் சாண்டி உம்மன்  நேற்று வருகை  தந்தார். தொடர்ந்து அவர் திருக்கல்யாண மாதாவிடம் பிரார்த்தனை செய்து வழிபட்டார். முன்னதாக  அவருக்கு சாத்தான்குளம் தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் லூர்துமணி  தலைமையில்  சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.  அவருக்கு திருக்கல்யாண மாதா படம் வழங்கப்பட்டது. இதில்  பொத்தகாலன்விளை கிராம கமிட்டி தலைவர் சிங்கராயன், புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர்  ஜோசப் ததேயுஸ்ராஜா உள்ளிட்ட பலர் இருந்தனர்.

Related Stories: