நெல்லை, ஜன. 1: தியாகி விஸ்வநாததாஸ் 81வது நினைவு தினத்தை முன்னிட்டு பாளை தெற்கு பஜாரில் அவரது படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு டீம் சங்க தலைவர் ஜெயமணி தலைமை வகித்தார். பாளை தொகுதி எம்எல்ஏ அப்துல் வகாப், தியாகி விஸ்வநாததாஸ் படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். நெல்லை கிழக்கு மாவட்ட வக்கீல் அணி துணை அமைப்பாளர் செல்வசூடாமணி வரவேற்றார். மாநகர திமுக செயலாளர் லெட்சுமணன், இளைஞர் காங். தலைவர் ராஜீவ்காந்தி, திமுக வட்ட செயலாளர் அபே மணி, 24வது வார்டு ஆவின் கல்யாணசுந்தரம், கவிஞர் சுப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.