பேட்டை ரூரல் பஞ்சாயத்தில் பட்டா திருத்த சிறப்பு முகாம்

பேட்டை, ஜன. 1: பேட்டை ரூரல் பஞ்சாயத்தில் பட்டா திருத்த சிறப்பு முகாம் நடந்தது. இங்குள்ள சமுதாய நலக்கூடத்தில் நடந்த முகாமில் ஞானம்மாள் கட்டளை தெரு, கொண்டாள வளவு, மலையாள மேடு, மைலப்புரம், ஈஸ்வரன் நகர் மக்கள் கலந்து கொண்டு மனுக்கள் அளித்தனர். நெல்லை தாசில்தார் சண்முக சுப்பிரமணியன் தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். இதில் பட்டா மாறுதல், பெயர் திருத்தம், மாற்றம் உள்ளிட்ட ஆணைகள் வழங்கப்பட்டன. முகாமில் துணை தாசில்தார் குமார், வருவாய் ஆய்வாளர் மாரித்துரை, பேட்டை 2 கிராம நிர்வாக அதிகாரி பியூலா ஹெலன், நரசிங்கநல்லூர் கிராம நிர்வாக அதிகாரி தாளமுத்து, பேட்டை ரூரல் பஞ்சாயத்து தலைவர் சின்னதுரை, 6வது வார்டு உறுப்பினர் ஆறுமுகம் உட்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: